சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராம்சுந்தர் நகர், அண்ணாமலைபுரம், செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளான தெருவிளக்கு ,சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற எந்த வசதியும் இல்லை.இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் அடிப்படை வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.