பண்ருட்டி அருகே கீழ்கவரப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள செந்தூர் காா்டன் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. இதனை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?