சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உடையடி சுடலைமாட சுவாமி கோவில் அருகில் உடன்குடிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.