திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, பெரியகளக்காட்டூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யவில்லை. இதனால் அங்கே பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள், மண் சேர்ந்து கால்வாய் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மழை தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் ஓடுகிறது. மேலும் அங்கே கொசு தொல்லைகளால் நோய் பரவும் சூழல் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. ஊராட்சி நிர்வாகம் மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.