சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-06-09 16:36 GMT
பழனி நகர் புதுதாராபுரம் சாலையில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இது அங்கே தேங்கி கிடப்பதால் கழிவுநீர் போல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்