மதுரை காளவாசல் தேனி ரோடு பி.பி.சாவடி அருகே பல மாதங்களாக குடிநீர் சாலையில் வெளியேறி செல்கிறது. மேலும் ஆங்காங்கே உள்ள சாலையின் பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?