திருவிதாங்கோடு பஞ்சாயத்துக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் சானல் அருகே சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-டினு, கிருஷ்ணன்கோவில்