நாமக்கல் மாவட்டம் உத்திரகிடிக்காவல் ஊராட்சியில் மலைவேப்பன்குட்டை கிராமத்திற்கு கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஆனங்கூரில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு வழங்கப்படுகிறது. அங்கிருந்து கொண்டு வரப்படும் குடிநீர் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு பிறகு ஊரின் பல பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக குடியிருப்புகளுக்கு சமீபத்தில் குடிநீர் சப்ளை செய்ய தொடங்கியதும் சற்று நேரத்தில் அந்த இணைப்புகளில் இருந்து தண்ணீர் கசிந்து பிரதான சாலையில் ஆறாக ஓடி வீணாகிறது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.