ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2024-05-19 13:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டான் கொளத்தூர் நேரு நகரில் ஒரு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மிகவும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதன் அருகே குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தொட்டியின் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. எனவே, எப்போது வேண்டுமானாலும் குடிநீர் தொட்டி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே, உயிர்சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்