திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அண்ணா தெரு, காமராஜர் தெரு மக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.