நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் சாலையில் குறுக்குதுறைக்கும், கருப்பந்துறைக்கும் இடையே அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.