குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-05-12 18:18 GMT
கடலூா் அருகே வௌ்ளகேட்-சுந்தரவாண்டி செல்லும் சாலையில் உள்ள குளம் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் குளத்தில் தண்ணீரை அதிக அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே இதை தவிர்க்க குளத்தை உடனே தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்