சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தேவக்கோட்டைக்கு செல்லும் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றித்தரிகின்றன. இந்த மான்கள் குடிநீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் வருவதால் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.