நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறையில் மின்விசிறி மற்றும் குடிநீர் வசதி இல்லை. இதனால் அங்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.