தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பாலம் அருகே காவிரி நீர் குடிநீர் இணைப்பு குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் போது குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.