சின்னசேலம் பேரூராட்சி சார்பில் இந்திரா நகர் ஏரி பகுதியில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிணற்றுக்கு மூடி அமைக்கப்படாததால் தூசி, குப்பைகள் விழுந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக கிணற்று தண்ணீரை பயன்படுத்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கிணற்றை மூடி போட்டு மூட வேண்டியது அவசியம்.