கோட்டாரில் இருந்து மணக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பறக்கை மெயின்ரோடு பகுதியில் சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி சாலையில் பாய்ந்தது. இதுபற்றி தினத்தந்நி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.