தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாலக்கோடு சாலையின் மேற்கு பகுதியில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் அடர்ந்து வளர்ந்து தண்ணீர் தேங்கும் பகுதியை ஆக்கிரமித்து வருகின்றன. விரைவில் கோடை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.