கிணற்றுக்கு தடுப்புசுவர்

Update: 2024-03-31 17:41 GMT

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டில் முத்து முனியப்பன் கோவில் தெரு உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள கிணற்றின் தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்துவிழுந்தது. அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதி முக்கிய வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அவசியம் அமைத்து தர வேண்டும்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்