புதர் மண்டி கிடக்கும் தண்ணீர் தொட்டி

Update: 2024-03-24 18:00 GMT
பண்ருட்டி அருகே நடுமேட்டுக்குப்பம் 8-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த தொட்டியை இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த தொட்டி தற்போது புதர் மண்டி கிடக்கிறது. தொட்டிக்கு குடிநீர் குழாய் இணைப்பும் செய்யப்படவில்லை. எனவே கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட தொட்டியை சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்