ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து காபி ஹவுஸ் செல்லும் சாலையில் கூட்டுறவு வணிக வளாகத்திற்கு எதிரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கிருந்து கடந்த பல மாதங்களாக குடிநீர் கசிந்து வீணாகிறது. ஏற்கனவே கோடை காலம் தொடங்கிவிட்டதால், ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவது காண்போரை கவலையடைய செய்கிறது. எனவே அந்த குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.