வீணாகும் குடிநீர்

Update: 2024-03-10 11:38 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி நெட்டவேலம்பட்டியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்