விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அன்னியூர் ஆகிய கிராமத்தில் உள்ள ஏரிகள் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த ஏரிகளில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஏரிகளை உடனே தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?