வடக்கனந்தல் பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு மூடி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த கிணற்றில் தற்போது குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் விழுந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த தண்ணீரை குடிக்கும் பொது மக்களுக்கு காலரா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.