குடிநீர் பற்றாக்குறை

Update: 2024-02-18 10:53 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கூத்தங்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக போதுமாக அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள ஊருக்கு சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்