குஜிலியம்பாறை தாலுகா மல்லபுரம் கிராமத்தில் வீடுகளுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அதே பகுதியில் உள்ள தாத்தா நாயக்கனூருக்கு காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.