டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் கொண்டையம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே ஆற்றுக் குடிநீரை திறந்து மூடும் கேட் வால்வு தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த குழிக்குள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து வருகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூடி சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?