வீணாகும் குடிநீர்

Update: 2024-02-11 11:49 GMT

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தில் 2-வது வார்டு மேற்கு பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியானது தற்போது சிதிலமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அருகில் உள்ள தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்