ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2024-02-04 12:08 GMT

திருவாரூரில் உள்ள மயிலாடுதுறை சாலை புதுத்தெரு எம்.ஜி.ஆர். சிலை பஸ் நிறுத்தம் எதிரே குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. ஆகாயத்தாமரைகளால் அடர்ந்து கிடப்பதால் நீர் கருப்பு நிறமாக மாறி வருகிறது. துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது. இதனால் குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தை ஆய்வு செய்து ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்