மதுரை திருநகர் முதல் ஸ்டாப் அருகில் நீண்ட நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குடிநீர் வீணாகுவதுடன் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.