பழனியை அடுத்த கோதைமங்கலம் கிராமத்தில் கோதீஸ்வரர் கோவில் பின்புறம் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி சேதம் அடைந்து பல இடங்களில் சிமெண்டு பூச்சு பெயர்ந்த நிலையில் உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுமோ என்ற நிலை உள்ளது. ஆனால் குடிநீர் தொட்டி அருகில்தான் ரேஷன் கடை உள்ளது. அங்கு வரும் மக்களும் தொட்டி அருகில் தான் நிற்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.