சின்னமனூரை அடுத்த அப்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.