தண்ணீர் செல்ல தடை

Update: 2024-01-14 13:50 GMT

கரூர் மாவட்டம் முத்தனூர் பகுதியில் புகழூர் வாய்க்கால் ஓரத்தில் குளம் வெட்டப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு கவுண்டன்புதூர் பகுதியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாய் மூலம் தண்ணீர் வந்து குளத்தில் சேர்கிறது. குளம் நிரம்பிய பிறகு குளத்தில் இருந்து தண்ணீர் புகழூர் வாய்க்கால் தண்ணீருடன் சேர்ந்து செல்கிறது. தொடர்ந்து இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குடிநீர் கிணறுகள் தண்ணீர் பஞ்சம் இன்றி உள்ளது. இந்நிலையில் இந்த குளத்தில் ஏராளமான செடி , கொடிகள், சம்புகள் ஆள் உயரம் முளைத்து இருப்பதால் இந்த குளத்தில் தண்ணீர் தேங்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் முத்தனூர் பகுதியில் புதிதாக பாலம் அமைக்கப்பட்ட போது அதிலிருந்து அள்ளப்பட்ட மண்கள் குளத்துக்குள் கொட்டி உள்ளதின் காரணமாக அந்த வழியாக தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்