புவனகிரி ஒன்றியம் பு.சித்தேரி புதுத்தெருவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை கட்டிடம் சில நாட்கள் மட்டும் பெயரளவுக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது காட்சிப்பொருளாக மாறிவிட்டது. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்ட கைப்பம்பு உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. எனவே கழிப்பறை, கைப்பம்பு ஆகியவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.