கோவை பீளமேடு லட்சுமிபுரம் லட்சுமியம்மாள் லே அவுட் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு குடிநீர் அதிகளவில் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் அங்கு குடிநீர் தேங்கி கிடப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.