செங்கோட்டை நகராட்சி 21-வது வார்டு காமராஜர் காலனியில் குடிநீர் இணைப்புக் குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் இணைப்பு குழாயில் ஏற்பட்டை பழுதை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.