உளுந்தூர்பேட்டை அருகே நரிப்பாளையம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள கைப்பம்பு பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய தண்ணீர் வசதி இன்றி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கைப்பம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.