திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி 36-வது வார்டு ரெட்டியார் கார்டன் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. தற்போது பருவமழை பெய்து பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிற்து. இதனால், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே, இப்பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் கொசு மருந்து தெளிக்க ஆவடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.