குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-11-05 10:21 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மன்மதன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் குழாயில் இருந்து நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. குழாயினுள் சிறிய குச்சியினை வைத்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க பொதுமக்கள் தற்காலிகமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். நீர் தேங்கி இருப்பதால் குழாய் இருக்கும் பகுதி சேறும்,சகதியுமாக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்