கோவை மாநகராட்சி 100-வது வார்டு போத்தனூர் சீனிவாச நகர் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அதில் இருந்து குடிநீர் வீணாகி வருகிறது. அந்த குடிநீர் சாலையில் ஓடி கழிவுநீரில் கலக்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.