கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒகேனக்கல் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. அங்குள்ள பள்ளத்தில் குடிநீர் தேங்குவதால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவி, கிருஷ்ணகிரி.