சென்னை அயனாவரம், உஜினிதேவி தெருவில் உள்ள மழைநீர் கால்வாய் மூடிகள் சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றது. மேலும், குப்பைகள் தெருகளில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் வடிகால்வாய் மூடியை மாற்றவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.