நெல்லை மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல்- கருங்குளம் பஸ் நிறுத்தத்துக்கு இடையில் அம்பை மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையும் சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.