திருச்செந்தூரை அடுத்த ராமசாமிபுரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.