புளியங்குடி கோட்டமலையாற்றில் இருந்து முள்ளிகுளம் வழியாக சங்கரன்கோவில் வடக்குபுதூருக்கு குடிநீர் குழாயில் கொண்டு செல்லப்படுகிறது. இதில் முள்ளிகுளம் ஊருக்கு கிழக்கு பகுதியில் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியவாறு உள்ளது. எனவே அங்கு நல்லி அல்லது சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.