கல்லுகூட்டம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பெரியாப்பள்ளி குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது, இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாராமல் செடி, கொடிகள் வளர்ந்தும், கரைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி அதன் கரைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன், கல்லுகூட்டம்.