சீரமைக்கப்பட்டது

Update: 2022-07-21 12:57 GMT

அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலாவிளையில் இருந்து களத்துவீடு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்ந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்