தூர்வாரப்படுமா?
அழகியபாண்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடுக்கரை கிராமத்தில் ஈரங்கிகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தை முறையாக தூர்வாரி பாராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயனப்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.சரவணகுமார், கடுக்கரை