குடியிருப்புகளுக்குள் புகுந்த ஏரி நீர்

Update: 2025-10-12 18:28 GMT

ஆற்காடு தாலுகா கீழ்விஷாரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுவர்-சிறுமிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாம்பு, தவளை, தேள், பூரான் போன்ற பூச்சிகள் வீடுகளுக்கு வருகின்றன. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கீழ்விஷாரம்.

மேலும் செய்திகள்