செய்யாறு டவுன் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி எதிரில் பல மாதங்களாகப் பயன்பாடு இன்றி பழுதடைந்த நிலையில் ஆழ்துளை கிணறு அடிபம்பு உள்ளது. அது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக இரவில் வருவோர் அடிபம்பு இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. பழுதடைந்த ஆழ்துளை கிணறு அடிபம்பை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-பெருமாள், செய்யாறு.